தழைக்கச் செய்வாய்
- பர்த்தி சாயீஸ்வரி, அங்காள பரமேஸ்வரி
- அன்னபூரணி, அங்கயற்கண்ணி, மாரி, காளி,
- அம்பிகையாம் அபிராமியை, சங்கரி, சாமுண்டி, சாவித்ரி,
- சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, விஷ்ணு மாயா, பகவதி,
- பரமேஸ்வரி, விசாலாட்சி, சாயிதேவிக்கு, ஆடிக்கிருத்திகை
- ஆடிச்செவ்வாயில் ஆனந்தமாய் மாவிளக்குப்படையலிட்டு
- மங்கலமாய்த் துதித்திடுவோம்
- சாயி மாதா உன்னருளால்தான் அசையும் அசையாப்
- பொருட்கள் இப்பூவுலகில் சிருஷ்டிக்கப்படுகிறது
- உன் கருணையால் மானிடர்க்கு முக்தி அளித்து அருள்கிறாய்
- மல்லிகை முல்லையாம் பலப்பல வண்ணமலர்கள் சூட்டிப்
- பட்டுச்சாற்றி மங்கலக் குங்குமம் இட்டு மங்கையர்
- திருமாங்கல்யமும், சந்ததிகள் தழைத்தும் சாந்நித்தியமும்
- பெற அருள்வாயே ஸ்ரீ சத்திய சாயி மாதா உனக்கு
- அனந்த கோடி ஆத்மார்த்த வந்தனங்கள் தாயே சாயிமா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்