நவராத்திரி தேவியராய்

  • ஸ்ரீ சத்யசாயி தேவிக்கு முத்தேவியராய்ப்
  • போற்றியே நமஸ்காரம்
  • செந்தாமரையும் அங்குசம், பாசம், சங்கமுமான
  • ஸ்ரீ மகாலட்சுமிதேவியாயும் வெண்தாமரையில்
  • வீணை, சுவடி, வியாக்யான முத்திரை
  • ஜெபமாலை, யுடனான ஸ்ரீ சரஸ்வதி தேவியாயும்
  • சிம்மவாகனத்தில் ஒன்பது வடிவங்களில் அசுரர்களை
  • வதம் செய்வித்த அம்பிகையாம்
  • ஸ்ரீ உமா, துர்க்கா, தேவி யாயும்
  • போற்றியே நமஸ்காரம்
  • முக்குணங்கள் களைந்தும் முன்வினைகளைக் கடத்தியும்
  • நவவித பக்தியில் திளைத்துச் சத்ய, தர்ம, சாந்தி,
  • பிரேமை, அகிம்சை, வழியில் மலர்ந்து
  • தர்மத்தில் திளைத்து மனித மாண்பு வளரவே
  • அருளவேண்டும் ஸ்ரீ சாயி பர்த்தீஸ்வரியே
  • நலன் தரும் நவராத்திரித் திருநாளில் நவமணியாய்
  • வந்தே நலம் வாழக்கருணை புரிய வரும்
  • நவநிதி அபிநிதியே ஸ்ரீ சத்திய சாயி தேவியே
  • சாயி சர்வதேவியே வர வேண்டும்
  • போற்றி உன் மலரடி சரணம் போற்றியே சாயிமா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0