அஞ்சுதல் தேவையில்லை

  • சாயி சிவம் அகத்துள்ளிருக்கையில்
  • அஞ்சுதல் தேவையில்லை
  • இகபரசுகந் தந்தினியவை நல்கிடும் அஞ்சுகமிருக்கையில்
  • இனியவையேது மேற்பதில்லை
  • சாயி சிவமே தவமதுவே மகாமகமிச் செகத்திலெனும்
  • எண்ணம் மாறுவதில்லை
  • வல்வினை, அவம், பயம், அல்லல், போக்கி நல்லன மட்டும்
  • தரும் நற்பேறு – அது மனித அவதாரத்தில் வந்திட்ட
  • தெய்வத்தின் தெய்வம்
  • புனித உருவத்தில் பூத்துவந்த புத்தம்புதுச் சாயிதேவ மலரே
  • நித்தமொருகதை, அரங்கேற்றும் சத்தியப் புதினப்புதுமையே
  • சத்தமின்றிச் சந்ததம் கூறும் சாந்நித்திய சங்கல்பமே
  • மொத்தமாய்ச் சரணாகதியில் ஆட்கொள்ளு மானந்த தெய்வம்
  • பண்ணிசைத்துப் பாடிவிட்டால் புன்னகைத்துப்
  • புரிந்தருள் பாலிக்கும் மென்னகைத் தெய்வம்
  • பஜன்பாடுகையில் மலர்களால் பதிலளிக்கும்
  • அன்பு மலர்த் தெய்வமது சிவசக்தி ஸ்வரூபம்
  • ஸ்ரீ சத்திய சாயீஸ்வர தெய்வச்சிவமே போற்றி போற்றியே
  • நகர சங்கீர்த்தனத்தில், நகரும் ஊர்வலத்தில்,
  • நகரும் துயரமெல்லாம், நாமஸ்மரணையில்
  • நாள்தோறும் நற்கதிதான் கிட்டுமே,
  • மனமும்தான் மலருமே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0