ஆனந்தசாயி
- ஆடும் மயிலழகு ஆனந்த சாயி முருகாவுனைப்
- பாடும் பணி பரிந்தெனக்குப் புரிந்தே வரமருள்வாய்
- தேடுமுன் பக்தர் மனம்புகுந்தே யருள்புரிபவா!
- உனைநாடுமடி யாரினுளம் கவர்ந்தவா தோடுடைய
- செவியன் மைந்தா அறுமுகாஉனைச் சார்ந்திடும்
- பக்தர்களுக் கருள்வாய் சாயி முருகா
- குன்றுதோறாடும் சேவற்கொடியோனுன் னரசாங்கம்
- அசையும் தென்றலிலும் சதிராடும்
- ஒளவைக்கு நாவற்பழத்திலுன் அருந்தமிழ்க்
- கவித்துவம்தான் மகத்துவம் அதுவுன் தனித்துவம்
- ஞானப்பழத்தில் தானுன் தெய்வத்துவமது உன் மகாத்மீயம்
- வேலும் மயிலும் துணையிருக்க வேண்டும் நித்யம்
- வரந்தர நீயிருக்க உன் வேலை வணங்குதல்
- தவிர வேறேது வேலை ?
- சாயி சத்தியசாயி ஞாலத்தில் ஞாயிறான தெய்வம் நீ
- பிரசாந்தி ஸ்ரீ சத்யசாயி சுப்ரமணிய சுவாமி நாதனே சரணம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்