நீதானே அம்மையப்பன்
- சாயி மாதா பிதா தெய்வமே உன் மகிழ்வே உனது
- பக்தர்களின் மனக்குறைகளைக் களைவதுதானே
- நல்லதாயினும் நடத்தித் தருகிறா யல்லதாகி னிலதைக்
- கடத்திக் களைந்து விடுகிறாய்
- சுயநலமுனக்கிலைதானே சுவாமி
- எங்களுக்குத்தான் சமநிலை பாவிக்கத் தெரியாமல்
- சில பல சமயம் போகின்றது சுவாமி
- மனித மனம் மனிதமுடன் வாழ வழி
- வகுத்தருள்வாய் சுவாமி
- நீ தானே மாதா பிதா குரு சகா தெய்வமாயும் எங்களுக்கு
- ஆத்ம தரிசனமளிக்க எங்கள் மேல் அன்பு
- கருணை மழை பொழிகிறாய் சுவாமி
- உன் மலர்ப் பாதம் தொழும்பேறு போதும்
- உன் நயன தீட்சை இதம் கிட்டினால் போதும்
- உன் ஸ்பரிசன தீட்சை நிதம் பெற்றால் பெரும் பேறு
- உன் நாமஸ்மரணை நாவினில் நித்தம் ஒலித்தால்
- பாயும் ஆனந்த வெள்ளம்
- பஜன்களின் ஆனந்தம்தானே, தானே அணுக்களில் பரவும்
- உன் சேவைகளில் பெறும் நித்ய சத்ய இன்பம்
- ஆத்மாவில் ஊடுறுவும், சந்ததிகளைக் காக்கும்
- உன் தேர்வல, ஊர்வலப் பயணத்தில்
- வாழ்வியல் பயணமே சிறக்கும்
- உன் அளப்பரிய கருணையில்தான்
- எங்கள் சந்ததிகள் பிறக்கும்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்