ராதையின் கண்ணா
- மாதங்களில் நான் மார்கழி என்று
- கீதையிலுரைத்திட்ட மாதவா உன் கீதைப் பாதையில்
- எங்களுக்குப் புதியபாதை யமைத்திட்டாய்
- ராதையின் கண்ணா ருக்மணிப் பொன்மணிவண்ண
- மதுசூதன் கேசவா முரளீதரா
- கோவிந்தயாதவ முகுந்த சத்யசாயி
- நாராயணா வருகவே
- மாயனே தூயனே பர்த்தித்தலச் சாயி கிருஷ்ணா
- திவ்யதேசங்களின் விஷ்ணு பரமாத்மனே!
- உன்னில் உலக உயிர்களின் ஜீவாத்மா
- உறைந்திடத்தானுருகிடுமே
- பிருந்தாவன நாயகனே நந்தகோப காளிங்க நர்த்தனனே
- உன் யமுனா தீரமெங்களின் கோகுலம்தான்
- உன் பிரசாந்தியே தானெங்களின் வைகுந்தம், கைலாயம்,
- மதுரா, பிருந்தாவனம்
- அயோத்தியும் சரயுவும், தானே ராமராஜ்யமாய்
- எங்கள் சாயி கொற்றமாய், முற்றமாய்,
- முற்றுமாய், முகிழ்ந்திருக்க
- சித்ராவதி தீரனே நீ சடுதியில் சீராய்ச் சீக்கிரத்தில் வருகவே
- யமுனா தீரத்திலுன் அதிசயம் அற்புதம் ஆனந்த லீலைகளைக்
- கண்டிட்ட கோப கோபி ராயுன் அபயகரத்தினாசி
- யுணர்ந்தவராய்த் தபோவனத்திலுன்
- அன்புக் கருணையில் திளைத்தவராய்
- ஆனந்த ஆராதனை செய்திடவே
- உன் தாமரைப் பாதமே தஞ்சமாய் வணங்கிடுமெங்களைக்
- காத்திடவே அன்புடனழகாய் வருகவே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்