தீபத்திரு ஒளியில்
- நீர் நிலம் காற்று வெப்பம் ஆகாயம் எனப்
- பஞ்சபூதத்தில் நிறைந்திருக்கிறாய்
- நெருப்பினிலே புற, அக, இருளைப் போக்கியே
- ஞானம் நல்குகிறாய்
- தீபத்திருவொளியினில் ஸ்ரீ சத்யசாயிசரஸ்வதி தேவியாய்
- அதன் வெப்பத்திலே ஸ்ரீ சாயி இலக்குமி தேவி
- யாயதன் நற்சுடரினில் உமையம்மைதேவியா யுனை
- நவராத்திரித் திருநாளில் நாடு நலம் பெற வீடு
- சுபிட்சம் பெறவுனதருட் கடாட்சம் தந்தே
- அருள்புரியவரவேண்டுமென ஸ்ரீ சத்திய சாயி
- சிவசக்தி சாயிமாவென முத்தேவியராய்
- நவசக்தி நவநிதி நவமணிகளாய் நவராத்திரி
- நாயகியாய்த் துதிக்கிறோம்
- தினம் வரும் நாளெல்லாம் உனைத் துதிக்கும்
- நற்பவி நாள் தானே
- உனைத்தொழா நாளெல்லாம் உன்கருணை
- பெறா வீண் நாள் தானே
- ஆயினும் உன்அன்புக் கருணையைத் தாயாய்
- சாலப்பரிந்து தயை செய்து வருகிறாய்
- மகாசிவராத்திரியின் ஆத்மலிங்கமே உன் கமலப்
- பாதாரவிந்தங்களுக்கு அனந்தகோடி
- ஆத்மார்த்த சரணாகதி சாயிமா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: