இப்பிறவி பெற்ற பயன்
- புல்லினத்தின் சிறு துல்லியப்பனித்துளியின்
- குளிர்ச்சியாயிருக்கிறாய் சுவாமி
- புத்தம் புது வகையாய்க் கருணையிலே
- ஆத்மாவில் தோய்த்தெடுத்தானந்திக்க வைக்கிறாய்
- மன உடல் நோய்களுக்குப் புனித விபூதியளித்தாட்
- கொண்டனுபூதியளித்தருள்கிறாய்
- நல்லனவைகளை நித்தமுறுதுணையாய்ச்
- சேர்த்தே சத்தியமாயதை வாழ்வியலில்
- வளமுடன் நிறைவேற்றுகிறாய்
- சத்தமின்றிச் சங்கீதமாய்ச் சிரித்தே அபயம் நல்குகிறாய்
- என் அடையாளம் விபூதியும், நானும் ஒன்றே என
- அருமருந்தாய், அநுபூதியாய் விபூதி ஒளஷதம் அளிக்கிறாய்
- இப்பிறவி பெற்றபயனே தெய்வமாய் நீ
- கிட்டியதென்பதுதான் சுவாமி
- இப் பிரபஞ்ச முழுதும் நிறைந்துள்ள பரப்பிரம்மமுனைத்
- தவிர வேறு யார் சுவாமி
- ஸ்ரீ சத்திய சாயி நாதா சரணம் சரணம் எனச்
- சரணடைந்தோர்க்குந்தன் பவித்ர சரணாகதியே
- அடைக்கலம்தான் தானாய் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: