நவநாயகியாய்

  • நவராத்திரித் திருநாள் நன்னாளே வருகவே
  • நவராத்திரி நாயகியே சாயி தேவி வருகவே
  • நவகோள்களை இயக்கும் நவ சக்தியாய் வருகவே
  • நவதானியமாம் பயிர்களுக்குள் உறையும் உயிரே வருகவே
  • நவரத்தினங்களில் ஒளியே வருகவே
  • நவநிதிகளும் உன் நிதியே சாயிமா நீ வருகவே
  • நவகனிகளின் சாராய் அதன் சுவையாய் நீ வருகவே
  • நவநதிகளும் மலையும் காடும் கடலும்
  • இயற்கை எழிலுமாய் வருகவே
  • மகிஷாசுரமர்த்தினியே வருக வருகவே
  • பிரபஞ்சத்தை உணர்த்தும் மகா திரிபுரசுந்தரியே வருகவே
  • உன் பிரபாவத்தை வியாபித்து வருகவே
  • ஸ்ரீ சத்திய சாயீஸ்வரி பர்த்தீஸ்வரி சாயிமா வருகவே
  • பரமேஸ்வரி ஜெகதீஸ்வரியாய் அருள் தருகவே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0