பல்லக்குப் பவனியில்

  • ஸ்ரீசாயி மகாலக்ஷ்மித் தாயே மகா மாயாவாய் வருகவே
  • ஸ்ரீ சாயிலட்சுமி அம்மா மகமாயியாய் வருகவே
  • ஸ்ரீ சாயி மகாலட்சுமி மாதா மகமாயி மாரியாய் வருகவே
  • ஸ்ரீ சாயி மகாலட்சுமி மா அஷ்டலட்சுமிகளாய்
  • அலங்காரமாய் வருகவே
  • ஸ்ரீ மகாலட்சுமி அன்னையே அலைமகள், கலைமகள்,
  • மலைமகள்களாய் மகிழ்வுடன் வருகவே
  • பற்றற்ற மனம் தந்து பாசத்தை அகற்றிட வருவாயே
  • திக்கற்றவர்க்குத் தெய்வமே நீ கருணை புரிந்திட வருவாயே
  • செருக்கற்ற உள்ளமதில் கொலுவிருக்க நீ வருவாயே
  • செந்தாமரையில் வீற்றிருக்கும் செங்கமலத்தாயாரே
  • செகம் செழிக்க வரம் தருவாயே
  • நீ இல்லாமல் செல்வாக்கு ஏதம்மா உன் சொல்வாக்கு
  • காக்கும்தான் உண்மை அம்மா
  • என்றும் நல்வாக்கு நற்பவி அளித்திட வாருமம்மா
  • என்றும் பல்லக்குப் பவனியில் இல்லத்தில் குடியிருக்க
  • இனிதாய் வருவாய் அம்மா
  • ஸ்ரீ மகாலட்சுமித் தாயே சகல சௌபாக்கியம்
  • தந்தனைவரையும் காக்க வேண்டும்
  • உன் அருள்பூமாரியாய்ப் பொழிந்து
  • இப்பூவுலகு சிறக்க வேண்டும்
  • உன் கருணை மழை அனைத்திலும் உலகெங்கும்
  • வர்ஷிக்க வேண்டும்
  • மனிதம் மலர்ந்து ஒற்றுமை ஓங்க வேண்டும்
  • சனாதன தர்மம் நிலைத்தே சகலமும் சாந்தி பரவவேண்டும்
  • சாத்வீகம் நிலைத்து ஆன்மீகம் அலைகளாய் வியாபிக்க
  • உன் அருள்வேண்டும்
  • சந்தனமாரியும் மஞ்சுளபாஷினியும் சந்தானலட்சுமியும்
  • சகலகலாவல்லியும் சௌதாமினி
  • சௌபாக்கியலட்சுமியுமாய் சங்குசக்ரபாணி
  • மகாவிஷ்ணு சமேதினியாய் வந்து மேதினியைக்
  • காத்தருளிட வருவாயே ஸ்ரீ சாயி லட்சுமித்தாயே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0