நவநாயகியாய்
- நவராத்திரித் திருநாள் நன்னாளே வருகவே
- நவராத்திரி நாயகியே சாயி தேவி வருகவே
- நவகோள்களை இயக்கும் நவ சக்தியாய் வருகவே
- நவதானியமாம் பயிர்களுக்குள் உறையும் உயிரே வருகவே
- நவரத்தினங்களில் ஒளியே வருகவே
- நவநிதிகளும் உன் நிதியே சாயிமா நீ வருகவே
- நவகனிகளின் சாராய் அதன் சுவையாய் நீ வருகவே
- நவநதிகளும் மலையும் காடும் கடலும்
- இயற்கை எழிலுமாய் வருகவே
- மகிஷாசுரமர்த்தினியே வருக வருகவே
- பிரபஞ்சத்தை உணர்த்தும் மகா திரிபுரசுந்தரியே வருகவே
- உன் பிரபாவத்தை வியாபித்து வருகவே
- ஸ்ரீ சத்திய சாயீஸ்வரி பர்த்தீஸ்வரி சாயிமா வருகவே
- பரமேஸ்வரி ஜெகதீஸ்வரியாய் அருள் தருகவே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: