பல்லக்குப் பவனியில்
- ஸ்ரீசாயி மகாலக்ஷ்மித் தாயே மகா மாயாவாய் வருகவே
- ஸ்ரீ சாயிலட்சுமி அம்மா மகமாயியாய் வருகவே
- ஸ்ரீ சாயி மகாலட்சுமி மாதா மகமாயி மாரியாய் வருகவே
- ஸ்ரீ சாயி மகாலட்சுமி மா அஷ்டலட்சுமிகளாய்
- அலங்காரமாய் வருகவே
- ஸ்ரீ மகாலட்சுமி அன்னையே அலைமகள், கலைமகள்,
- மலைமகள்களாய் மகிழ்வுடன் வருகவே
- பற்றற்ற மனம் தந்து பாசத்தை அகற்றிட வருவாயே
- திக்கற்றவர்க்குத் தெய்வமே நீ கருணை புரிந்திட வருவாயே
- செருக்கற்ற உள்ளமதில் கொலுவிருக்க நீ வருவாயே
- செந்தாமரையில் வீற்றிருக்கும் செங்கமலத்தாயாரே
- செகம் செழிக்க வரம் தருவாயே
- நீ இல்லாமல் செல்வாக்கு ஏதம்மா உன் சொல்வாக்கு
- காக்கும்தான் உண்மை அம்மா
- என்றும் நல்வாக்கு நற்பவி அளித்திட வாருமம்மா
- என்றும் பல்லக்குப் பவனியில் இல்லத்தில் குடியிருக்க
- இனிதாய் வருவாய் அம்மா
- ஸ்ரீ மகாலட்சுமித் தாயே சகல சௌபாக்கியம்
- தந்தனைவரையும் காக்க வேண்டும்
- உன் அருள்பூமாரியாய்ப் பொழிந்து
- இப்பூவுலகு சிறக்க வேண்டும்
- உன் கருணை மழை அனைத்திலும் உலகெங்கும்
- வர்ஷிக்க வேண்டும்
- மனிதம் மலர்ந்து ஒற்றுமை ஓங்க வேண்டும்
- சனாதன தர்மம் நிலைத்தே சகலமும் சாந்தி பரவவேண்டும்
- சாத்வீகம் நிலைத்து ஆன்மீகம் அலைகளாய் வியாபிக்க
- உன் அருள்வேண்டும்
- சந்தனமாரியும் மஞ்சுளபாஷினியும் சந்தானலட்சுமியும்
- சகலகலாவல்லியும் சௌதாமினி
- சௌபாக்கியலட்சுமியுமாய் சங்குசக்ரபாணி
- மகாவிஷ்ணு சமேதினியாய் வந்து மேதினியைக்
- காத்தருளிட வருவாயே ஸ்ரீ சாயி லட்சுமித்தாயே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: