ஸ்ரீ சாயி சரஸ்வதியே

  • அறிவியல்துறைக்கு எக்காலமும் பொருந்தும்
  • சிறப்புடைதேவி சாயிகலைவாணியே வருகவே
  • வெண் தாமரை மலரில் வீற்றிருந்து தாவரவியலுக்கு
  • அழகு சேர்த்தாயம்மா சாயினிமா
  • சாயிமாதா கலைவாணிமா சரஸ்வதியே வருக வருகவே
  • அன்னவாகனத்தில் விலங்கியலுக்கு அலங்கரித்
  • தருளினாயோ ஏட்டுச்சுவடிகள் கையிலேந்தி
  • மொழிகளின் அடையாளமாக அற்புதம் செய்தாயோ சாயிமா
  • மீட்டும் வீணைதனில் அதன் ஒலியில் கலைகளின்
  • கடாட்சம் கொண்டாயோ ஆயகலைகளை
  • உலகிற்கு உணர்த்தினாயோ பர்த்தீஸ்வரிமா
  • ஜெபமாலையினைக் கையிலெடுத்துக் கணக்கியலில்
  • புதிதாய்க் கணிதத்தின் குறியீடு தந்தாய்
  • சாயி பரமேஸ்வரி மாதா
  • பேச்சு, அறிவு, கல்வி வித்தையில், கொலுவிருந்து வாக்தேவி
  • யெனப் பெயர் கண்டாயோ பிரம்மஸ்ரீமா
  • ஸ்ரீ சத்ய சாயிமா நவராத்திரிநன்னாளில் நலம் நல்க
  • நற்பவி யளித்திட நற்றமிழாய் முத்தமிழாய்ப்
  • பைந்தமிழாய்த் தீந்தமிழாய்ச் சிருங்காரமாய்ச்
  • சீலமளித்திட வருவாயுன் கருணையளித்திட
  • ஸ்ரீ சத்யசாயி சரஸ்வதி மாதாவே சரணம் தாயே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0