திருவாதிரைத் திருநாள்
- திருவாதிரைத் திருநாளில் திவ்யத் திருவுருவம்
- திருவும் ஆதிரையும் இணைந்து ஒன்றாய் உதித்ததுவோ?
- திருவாய் மலர்ந்து பங்காரு என்றழைத்ததுவோ?
- கரு முதல் திரு வரை பக்தருக்குக் காப்பாய் இருந்ததுவோ?
- ஒரு முறை உன்னைப் பார்த்த உள்ளம்தான்
- தான் மறந்திடுமோ?
- பன் மதம் கூடும் பர்த்தியம் பதியில் உதித்தாயே
- உன் மதம் அன்பு மதம் தான் என்று உரைத்தாயே
- பண் பாடி உன்நாமம் தொழ வைத்தாயே
- கண்ணாய்க் கருணை தந்து காத்திடும் சிவ-சக்தி தாயே
- இரு தாய்ப் பாசச் சங்கமத்தில் நீ வளர்ந்து விட்டாய்
- ஒருமனதாய் உன்னை ஏற்றிடச் செய்து விட்டாய்
- கருவிலே கற்பகமாய் நிறைந்துவிட்டாய்
- உருவிலே உண்மையாய் நிலைத்து விட்டாய்
- பிரமிக்க வைத்த உன் செய்கைகள் உன் பிரவாகம்
- ஒருமித்த மனத்தினில் ஒலித்திடும்அது ரீங்காரம் – நீ
- தருவித்த பரிசுகளது ஏராளம் அது உன் தாராளம்
- உன் பிரசாந்தியில் மட்டும்தான் கிட்டும் பேரானந்தம்
- பர்த்தி வாசன் நீ இருக்க உன் பக்தருக்குப் பரவசம்தான்
- பரம நேசன் உன்னைத் துதிக்கும் உன் அடியார்க்கு
- நீயே பிரசாதம் தான்
- சாயி நாமம் சொல்லச்சொல்ல சங்கடங்கள் தீரும் தான்
- தாயும் நீ, தந்தையும் நீ தயைசெய்தல் ஆனந்தம்தான்
- விரைந்து வந்து விடிவெள்ளி தந்து விடு
- புரிந்து வந்து புதுப்பாதை காட்டிவிடு
- சரிந்த மனதைச் சாதிக்க செய்துவிடு
- சாத்வீகமாய் வந்து சாகசம் அருளி விடு
- சனாதன தர்மமதில் வாழ்ந்திட வாழ்த்திவிடு.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்