சாயி கணேசன்

 • விநாயகனே விருப்பம் கூடிடத் துணை வருவாயே சாயி
 • கணேசா
 • எனையாளும் எந்தையே விருட்ச அருள்தரத் தன்னால்
 • வந்தருளினால் போதும் சாயி கணேசா
 • ஞானத்தால் ஞானப்பழம் பெற்ற ஐங்கரனே பல்சுவைப்
 • பழங்களுனக்குப் பிடித்தம்போல்
 • பன்மதப்பக்தருனக்குப்பிடிக்கும்
 • கரும்பாய் நீ களிப்பாய்க் களிறாயும் வந்தே குறும்பாய்
 • நல்வழிப்படுத்துவாய். ‘அவரை’ உனக்குப் பிடிக்கும்,
 • எவருக்குத்தானுன்னைப் பிடிக்காது
 • பச்சரிசி, வெல்லப் பிரசாதமுடன் னருளுக்குப்
 • புட்டு படைக்கலாம்
 • வெள்ளரிப் பழமுனக்கு நிவேதித்துப் பற்றற்ற
 • நிலை யுணரலாம்
 • கிழங்குகள் படைத்துனக்குக் குவலயம் குதூகலிக்கும்
 • அவல் வைத்துத் தொழுது பக்தர் தம் அவாவை
 • நிறைவேற்றுவர்
 • கடலை நிவேதனம் சுடலை வரையுன் அருளாகக் கூடவரும்
 • உன் மோதகம் கொழுக்கட்டை எல்லோருக்கும் பிடிக்குமே
 • அப்பமும், உனக்கு எப்பவும் இஷ்டமே
 • பாலும், தேனும், பாகும், பருப்பும் தந்து சங்கத்தமிழ்
 • மூன்று கேட்ட அவ்வைக்குக் காட்சி தந்த நீ,
 • உலகுக்குச் சாட்சி விநாயகர் எனப் பெயர் பெற்றாய்
 • தந்தங்கள் உன் பக்தர்களின் சொந்தங்கள்
 • பந்தங்களுன் தும்பிக்கையே நம்பிக்கை
 • அரசு, ஆல், வன்னி நிழலில் நீயிருந்து இகபர சுகமதில்
 • அருட்கழல் தர வேண்டும்
 • உலகுக்கு முதல்வன் நீ உற்ற துணையானது
 • எத்துனைப் பேர்களுக்கோ
 • வள்ளிக் குமரனுக்கும், உதவியாய் வந்தாய்
 • அகத்தியருக்கும், காகமாய்க் கமண்டலத்தில்
 • குடகுமலைக்கு வந்து காவிரி தந்தாய்
 • ஞாலம் சுற்றாமல், ஞானப்பழத்திற்குத் தாய் தந்தையரை
 • வலம் வந்தாய். இப்படி எத்தனையோ
 • இனிமையுன்னாலுண்டு சாயி கணேசா
 • பிற சாந்தி, வேண்டாம் பிரசாந்தி போதும்
 • மூஞ்சுறு வாகனதேவா
 • பிரகாந்தி, சாந்தி தரவேண்டும், ஸ்ரீ சத்யசாயி கணேசா
 • ஸ்ரீ சாயி கணேசா. சரணம் சரணம் ஸ்ரீ சத்யசாயி கணேசா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0