திருவாதிரைத் திருநாள்

  • திருவாதிரைத் திருநாளில் திவ்யத் திருவுருவம்
  • திருவும் ஆதிரையும் இணைந்து ஒன்றாய் உதித்ததுவோ?
  • திருவாய் மலர்ந்து பங்காரு என்றழைத்ததுவோ?
  • கரு முதல் திரு வரை பக்தருக்குக் காப்பாய் இருந்ததுவோ?
  • ஒரு முறை உன்னைப் பார்த்த உள்ளம்தான்
  • தான் மறந்திடுமோ?
  • பன் மதம் கூடும் பர்த்தியம் பதியில் உதித்தாயே
  • உன் மதம் அன்பு மதம் தான் என்று உரைத்தாயே
  • பண் பாடி உன்நாமம் தொழ வைத்தாயே
  • கண்ணாய்க் கருணை தந்து காத்திடும் சிவ-சக்தி தாயே
  • இரு தாய்ப் பாசச் சங்கமத்தில் நீ வளர்ந்து விட்டாய்
  • ஒருமனதாய் உன்னை ஏற்றிடச் செய்து விட்டாய்
  • கருவிலே கற்பகமாய் நிறைந்துவிட்டாய்
  • உருவிலே உண்மையாய் நிலைத்து விட்டாய்
  • பிரமிக்க வைத்த உன் செய்கைகள் உன் பிரவாகம்
  • ஒருமித்த மனத்தினில் ஒலித்திடும்அது ரீங்காரம் – நீ
  • தருவித்த பரிசுகளது ஏராளம் அது உன் தாராளம்
  • உன் பிரசாந்தியில் மட்டும்தான் கிட்டும் பேரானந்தம்
  • பர்த்தி வாசன் நீ இருக்க உன் பக்தருக்குப் பரவசம்தான்
  • பரம நேசன் உன்னைத் துதிக்கும் உன் அடியார்க்கு
  • நீயே பிரசாதம் தான்
  • சாயி நாமம் சொல்லச்சொல்ல சங்கடங்கள் தீரும் தான்
  • தாயும் நீ, தந்தையும் நீ தயைசெய்தல் ஆனந்தம்தான்
  • விரைந்து வந்து விடிவெள்ளி தந்து விடு
  • புரிந்து வந்து புதுப்பாதை காட்டிவிடு
  • சரிந்த மனதைச் சாதிக்க செய்துவிடு
  • சாத்வீகமாய் வந்து சாகசம் அருளி விடு
  • சனாதன தர்மமதில் வாழ்ந்திட வாழ்த்திவிடு.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0