சாயி விட்டலனே
- சாயி நாராயணா ஸ்ரீ சத்திய சாயிநாராயணா
- வேத பாராயண விட்டல பாண்டுரங்கா
- நிதிக்கு நிறைவும் நீயானாய்
- சம்சார சாகர கதிக்கும் துணையானாய்
- நெறிதரு நிமலனே பரப்பிரம்ம ஸ்வரூபனே எங்கும்
- வியாபித்த வியாழ வியாபகனே உயிர்க்கின்பமே
- உள்ளத்தின் உருவ ஒளிப்பிழம்பே உன் பாதாரவிந்தம்
- தொழுவோர் மனம்மகிழ் ஆதாரச்சொந்தமே
- பந்தமே உன் தரிசனம் ஸ்பரிசனம் சம்பாஷனம்
- உணரவைக்குமுன் கரிசனமே
- கேதார ஸ்ரீதரனும் நீ ஹரிஹரனும் நீ
- அம்மையப்பனும் நீ யானாய்
- உன் குன்றாக் கருணையிலே குறை ஏது ?
- மறை தந்த இறையே
- என்றும் மாற்றமில்லாத திரு அவதாரத் திருவே
- உன்கரை காணவியலா அன்புக்ருணைக் கடலில்
- முத்தெடுத்து முப்போதும் முகிழ்த்தே மகிழ்கிறோம்
- ஞானமளித்து ஞாலமதில் நல்வாழ்வு வாழ
- அருள்தர வருவாயே
- ஆடிப்பெருக்குப் போலுனை நாடிவருமுன் பக்தர் நலம் வாழ
- நற்பவி அருள்கவே ஸ்ரீ சாயி ராமா
- உன் மலரடி சரணம் போற்றி போற்றி போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்