சாயி விட்டலனே

  • சாயி நாராயணா ஸ்ரீ சத்திய சாயிநாராயணா
  • வேத பாராயண விட்டல பாண்டுரங்கா
  • நிதிக்கு நிறைவும் நீயானாய்
  • சம்சார சாகர கதிக்கும் துணையானாய்
  • நெறிதரு நிமலனே பரப்பிரம்ம ஸ்வரூபனே எங்கும்
  • வியாபித்த வியாழ வியாபகனே உயிர்க்கின்பமே
  • உள்ளத்தின் உருவ ஒளிப்பிழம்பே உன் பாதாரவிந்தம்
  • தொழுவோர் மனம்மகிழ் ஆதாரச்சொந்தமே
  • பந்தமே உன் தரிசனம் ஸ்பரிசனம் சம்பாஷனம்
  • உணரவைக்குமுன் கரிசனமே
  • கேதார ஸ்ரீதரனும் நீ ஹரிஹரனும் நீ
  • அம்மையப்பனும் நீ யானாய்
  • உன் குன்றாக் கருணையிலே குறை ஏது ?
  • மறை தந்த இறையே
  • என்றும் மாற்றமில்லாத திரு அவதாரத் திருவே
  • உன்கரை காணவியலா அன்புக்ருணைக் கடலில்
  • முத்தெடுத்து முப்போதும் முகிழ்த்தே மகிழ்கிறோம்
  • ஞானமளித்து ஞாலமதில் நல்வாழ்வு வாழ
  • அருள்தர வருவாயே
  • ஆடிப்பெருக்குப் போலுனை நாடிவருமுன் பக்தர் நலம் வாழ
  • நற்பவி அருள்கவே ஸ்ரீ சாயி ராமா
  • உன் மலரடி சரணம் போற்றி போற்றி போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0