வசந்த கல்யாணியாய்
- பகவான் பாபாவின் அன்புக் கருணை, கவிகள்
- ஒருங்கிணைந்து பாடும் வசந்த ராகம்
- வசந்தகால வாஸந்திகை மலர்போல் மணம் வீசும்
- அருள் வரமாகும் மலர்ச்சரம்
- இருள் போக்கியே இன்பம் மட்டுமே நல்கும்
- இனிய கரம், பரம், சுகம்
- சுவாமியினன்பு மதம் ஆனந்தராகமாலிகை, ஆனந்த பூபாளம்
- வசந்த, கல்யாணி, ராக ஆலாபனையாம் சுகந்த அரவிந்தம்
- சனாதனசாரதியாய் பக்தர்களுக்கு அளிக்கப்பட்ட சத்தியம்
- தர்மம் சாந்தி பிரேமை அகிம்சையே தார்மீக தர்மம்
- பன்மதப் பக்த நதிகள் சங்கமிக்கும் பர்த்தித்தலம்
- பாரின் கலங்கரை விளக்கம்
- சம்சார சாகரத்தைக் கடக்க வைக்கும் கருணைக்கடல்
- அவரவர் தெய்வமாய்க் காட்சி தந்து கடாட்சிக்கும்
- கருணைமடல் தெய்வத்தின் அன்புத் திடல்
- உயிரில் கலந்திட்ட உணர்வுகளை வார்த்தைகளில்
- வடித்துப்புனிதக்கரங்களில் பெறும்
- அன்புத் தெய்வம் சாயிபகவான்
- முப்போது மெப்போது நினைத்த ழைத்தாலும் தப்பாது வந்து
- தயை செய்யும் மாதா பிதா குரு சகாவாகி ஆனந்தித்து
- அருள் தந்து காக்கும் கருணை அருணைத்
- தெய்வமுனைப் பணிந்துதொழுந்தெழுதல்
- இப்பிறவி பெற்ற பயனே
- உனக்கு ஆத்ம வந்தனம் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்