ஸ்ரீ சாயி ரங்கன்

  • வரம் தர வருவான் ஸ்ரீ சத்யசாயி வரதன்
  • தசரதன் புதல்வன் பரத லக்ஷ்மண சத்ருகன் அண்ணன்
  • குகன் விபீஷனனுக்கும் தமயன் தான்
  • நம்பினோர்க்கு நல்வரமளித்திடும் சாயிரங்கன்
  • நங்கூரமாம் பக்தியின் கலங்கரை விளக்கம்
  • தஞ்சமென வந்தோர்க்குத் தயைசெய்யும் தயாபரன்
  • வஞ்சமிலா நெஞ்சம் தந்து வாழ வைக்கும் கிருபாகரன்
  • பஞ்சமில்லா அன்பு கருணைக்கொடைக்குச் சுதாகரன்
  • பஞ்சப்பொறிகளி லாட்கொண்ட ஸ்ரீ சத்யசாயி ராமன்
  • மனித உருவில் அவதரித்து வந்த பண்டரி பாண்டுரங்கன்
  • விட்டிலுக்கு மருளும் ஸ்ரீ சாயி விட்டலன்
  • அருட்கருணைப் பிரபாவமளித்திடும் பிரபாகரன்
  • மூன்றடியளந்திட்ட வாமனன் மதுசூதனன்
  • நாராயணீய ஸ்ரீ குருவாயூரப்பன்
  • நந்தகோப நந்தனன் சுதர்ஷனன்
  • சந்ததிகளை வாழவைக்கும் ஸ்ரீ சத்ய சாயி ராமன்
  • சரணம் போற்றி போற்றி போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0