ஸ்ரீ சாயி ரங்கன்
- வரம் தர வருவான் ஸ்ரீ சத்யசாயி வரதன்
- தசரதன் புதல்வன் பரத லக்ஷ்மண சத்ருகன் அண்ணன்
- குகன் விபீஷனனுக்கும் தமயன் தான்
- நம்பினோர்க்கு நல்வரமளித்திடும் சாயிரங்கன்
- நங்கூரமாம் பக்தியின் கலங்கரை விளக்கம்
- தஞ்சமென வந்தோர்க்குத் தயைசெய்யும் தயாபரன்
- வஞ்சமிலா நெஞ்சம் தந்து வாழ வைக்கும் கிருபாகரன்
- பஞ்சமில்லா அன்பு கருணைக்கொடைக்குச் சுதாகரன்
- பஞ்சப்பொறிகளி லாட்கொண்ட ஸ்ரீ சத்யசாயி ராமன்
- மனித உருவில் அவதரித்து வந்த பண்டரி பாண்டுரங்கன்
- விட்டிலுக்கு மருளும் ஸ்ரீ சாயி விட்டலன்
- அருட்கருணைப் பிரபாவமளித்திடும் பிரபாகரன்
- மூன்றடியளந்திட்ட வாமனன் மதுசூதனன்
- நாராயணீய ஸ்ரீ குருவாயூரப்பன்
- நந்தகோப நந்தனன் சுதர்ஷனன்
- சந்ததிகளை வாழவைக்கும் ஸ்ரீ சத்ய சாயி ராமன்
- சரணம் போற்றி போற்றி போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்