புகலிடம்
- பிரசாந்தி நிலையமதில் மனச் சாந்தி நிலவும்
- பிறசாந்தி வேண்டாத உள்ளங்களில் நிஜச்சாந்தி நிலைக்கும் பிரசாந்தி பன்மதப் பக்தர்களுக்குப் புகலிடம்
- பிறசாந்தி தேடாத பகவானின் பக்தர்களுக்குச்
- சுவாமியின் அதிசய அற்புதங்கள் லீலாவினோதங்க ள்
- நடக்கின்ற நிகழ்விடம்
- பிரசாந்தி நம் சுவாமியின் அன்புக் கருணையின்
- அவதாரப் பிறப்பிடம்
- பன்மதப் பக்தர் உள்ளங்களும் நம் சுவாமியின்
- நிரந்தர இருப்பிடம்
- சத்ய தர்ம சாந்தி பிரேமை அகிம்சைதனைப் போதித்து
- கீதைப்பாதை வழிநடத்தும் சனாதன சாரதியின்
- பர்த்தித்தலப் புனிதப் பிறப்பிடம்
- அவரவர் இதயமே பிரசாந்தி
- அதில் நம்சுவாமியின் ரூபமேபிரகாந்தி
- காமம் கோபம் பேராசை வெறுப்பற்ற பெருகும்
- விரிவடையும் விகாசமான வியாபகமான
- பிரகாசப் பிரவாகமே பிரசாந்தி
- அதில் நிரந்தர வாசம்செய்கின்ற கருவறைத் தெய்வமே
- ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் மலர்ப்பாதார
- விந்தங்களுக்குச் சரணாகதி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்