கன்னல் சுவை
- அன்பர்க்கு அருள் புரியும் அன்பு மத சாயிநாதா
- அன்பு மட்டும் அணிகலனாய் வாழ்வியல்
- வகுத்திட்ட சாயிநாதா
- என்பும் உருகும் உன் எண்ணிலடங்கா அற்புதங்கள்
- கண்டோம் சாயிநாதா இன்பம் தந்து
- இனிமை சேர்க்கும் உன் தேனி னிமைப்
- பண்பாடல்களே ஆத்ம ஆனந்தம் சாயிநாதா
- கன்னல் சுவை போலுன் அருள் அறவுரைகள்
- தித்திக்கும் சாயிநாதா
- சன்னல் வரும் தென்றல்போல் எத்திக்குமுன்
- புகழ்பரவி மணம் வீசும் சாயிநாதா
- மின்னலாயுன்காட்சி வந்துமாட்சி தந்து
- மீட்சியருளும் சாயிநாதா
- முன்னம்நின்று சாட்சியாகிக் காட்சி
- தந்தே சாந்நித்தியமளிப்பாய் சாயிநாதா
- சங்கநாதம்போல் புனிதமுன் னபிஷேகத் தீர்த்தமே சாயிநாதா
- கங்கைப் புனித முன்பண்களிசைத்திடும் சாயி கீதங்கள்
- நாங்கள் பெற்றபேறு சாயிநாதா
- நீங்காமலுடன் வந்து நீக்கமற இப்பிறவிக்கடன் போக்கி
- முக்திளித்திடுவாய் சாயிநாதா
- எப்போது முப்போது முந்தன் நாமஸ்மரணை போதும்
- நாமணக்க சுவாசத்திலுன் சுகந்த முன் சங்கல்பமாய்
- சாந்நித்யமளித்தால்போதும்
- உயிரிலுன் உணர்வு கலந்தாட்கொண்டால் போதும்
- சத்ய தர்ம சாந்தி பிரேமை மனிதமுடனுன் சேவைகளாற்றிட
- மன, தேக, பலம் அருள்வாய் சாயிநாதா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்