பஞ்ச சபைகள் தரிசனம்
- பஞ்ச சபைகள் தரிசனம் கண்ட ஆனந்தமுன்
 - கரிசனத்திலிருக்குமுனது பக்தர்கள் மனதினிலே
 - பஞ்சாட்சர மந்திரமுன் சாய்ராம் மந்திரமாய்ப்
 - பக்த அன்பர்களின் நாவினிலே ஒலிக்கும்
 
- பஞ்சபூதங்களுமுந்தன் பவித்திரவடிவம்
 - தானென்றுன தடியவர் மனமெப்போதும் நினைக்கும்
 - பஞ்சமுக நாதனுந்தன் பரப்பிரம்மத்தை யிப்பாரே
 - பணிந்தே துதிக்கும்
 
- பஞ்சநதிப் பிரவாகமாயுன் னருட்கொடை பாய்ந்தே
 - உன் பக்தர்களை வாழ்வாங்கு வாழ வைக்கும்
 - பஞ்சம் பசிப் பிணி நீக்கிப் பாரினனைத் துயிர்களிலும்
 - மனிதம் ஓங்கி நிலைத்த நீடித்த இன்பம் பெற
 - உன் திருக்கருணை அருள வேண்டும்
 - பஞ்சநதிகளிலும் உன் பரப்பிரம்ம சாந்நித்தியம்
 - சங்கமித்துப் பாய்ந்தருளவேண்டும்
 
- எத்தனையோ சொல், வாக்குறுதி, தவிர்த்துப் பொய்யாய
 - நடிப்பவரையும், ஏமாற்றுக்காரர்கள், துரோகிகளையும்
 - பொய்யரையும், இனம் கண்டுகொள்ளும்
 - வாய்ப்பளித்துக் காத்தருள வேண்டும்
 - அவர்களே மனம் திருந்தி நற்பவி யளித்திட நற்கதியும்
 - நல்கிடவே வேண்டும்
 
- சாயி வாக்கு சத்திய வாக்கு
 - கொடுத்த வாக்கைக் காப்பாற்றி உன்சேவைகளாற்றிடத்
 - தகுந்த பக்த அன்பர்களுக்கும் வாய்ப்புகள்
 - அளித்து அவர்களும் பற்பல சேவைகளாற்றிடச்
 - செய்திட உன்சங்கல்ப வரம் வேண்டும்
 - ஸ்ரீ சத்திய சாயி சிவமே சாயீசா சரணம் சாயீசா.
 
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
  
  Help Desk Number: