நீயே சுவாசமாய்
- பூக்கள் மலரும் நந்தவனச் சோலையில்
- நீ மணமாயிருக்கிறாய்
- பாக்கள் உதிக்கும் கற்பனையில் நீ சொற்களா யினிக்கிறாய்
- தேனீக்களின் உணவாய் நீ மகரந்தங்களில் சிறக்கிறாய்
- தானாய்த் தானே வந்து, தயை செய்வித் தருள்கிறாய்
- மானாய் மீனாய் மலையாய் மடுவாய் வானாய்
- நிலமாய் வளிஒளியாய யனைத்திலும்
- பரப்பிரும்மமாய் ஒன்றி நிற்கிறாய்
- பக்தர்களின் எண்ணத்தில் கஜேந்திர
- மோட்சமாய்க் காட்சிதருகிறாய்
- கஜமுகனே சாயி நிஜ முகனே கலியவதாரக் கண்கண்ட
- தெய்வத்தின் தெய்வமே களிறு. வண்டு, புறா,
- பிடி, அரவம், அணில், மந்தியென
- அனைத்துயிரிலும் அணுவாய் ஆட்சி செய்கிறாய்
- மறுபடி பிறவா வரந்தந்து காத்தருள வருவாய் கடைத்தேற்றி
- விடுவாய் கரம் பற்றி உடன் வருவாயே
- வாழ்வியலில் வசந்தமாய் நிதி நீயாய் கதியுன் பதமாய்
- மதியுன் வசமாய் மனமுந்தன் நேசமாய்
- சாயி நாமமே சுவாசமாயிருந்து நற்பவியளித் தருள்க.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்