நீயே சுவாசமாய்

  • பூக்கள் மலரும் நந்தவனச் சோலையில்
  • நீ மணமாயிருக்கிறாய்
  • பாக்கள் உதிக்கும் கற்பனையில் நீ சொற்களா யினிக்கிறாய்
  • தேனீக்களின் உணவாய் நீ மகரந்தங்களில் சிறக்கிறாய்
  • தானாய்த் தானே வந்து, தயை செய்வித் தருள்கிறாய்
  • மானாய் மீனாய் மலையாய் மடுவாய் வானாய்
  • நிலமாய் வளிஒளியாய யனைத்திலும்
  • பரப்பிரும்மமாய் ஒன்றி நிற்கிறாய்
  • பக்தர்களின் எண்ணத்தில் கஜேந்திர
  • மோட்சமாய்க் காட்சிதருகிறாய்
  • கஜமுகனே சாயி நிஜ முகனே கலியவதாரக் கண்கண்ட
  • தெய்வத்தின் தெய்வமே களிறு. வண்டு, புறா,
  • பிடி, அரவம், அணில், மந்தியென
  • அனைத்துயிரிலும் அணுவாய் ஆட்சி செய்கிறாய்
  • மறுபடி பிறவா வரந்தந்து காத்தருள வருவாய் கடைத்தேற்றி
  • விடுவாய் கரம் பற்றி உடன் வருவாயே
  • வாழ்வியலில் வசந்தமாய் நிதி நீயாய் கதியுன் பதமாய்
  • மதியுன் வசமாய் மனமுந்தன் நேசமாய்
  • சாயி நாமமே சுவாசமாயிருந்து நற்பவியளித் தருள்க.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0