பர்த்தியில் பிறந்திட
- உன் அருள் இல்லையென்றால் உள்ளமதில் மகிழ்வேது ?
- துயர் இருளில் மூழ்கிவிட்டால் பக்தர் மனதினிலே
- மாற்றம் ஏது ?
- அற்புதங்கள் பல செய்து பக்தர் இடர் களைந்தாய்
- உன்பொற்பதங்கள் கதி என்றுனை நம்பி வந்தவர்க்குன்
- கருணையன்பு தந்தாய்
- கற்பகத்தருவாயும் நின்று கேட்டதெல்லாம்
- தந்து மகிழ்வித்தாய்
- உன் பொற்பத மலரடி தொழுதிடவே நற்பவியும்
- நல்கி நலம் பல செய்து விட்டாய்
- ஆத்ம விசாரத்தின் சிரேஷ்டமான இடம்தான் பர்த்தியம்பதி
- எங்கள் ஆத்மாவின் விசாரனையின் அற்புத அதிசய
- இஷ்ட இனிய இன்பத்தலம்தானே பர்த்தித்தலம்
- ஏன் இந்த வாழ்க்கை என மனம் சோர்ந்து வெம்பி
- வாழ்வியலில் வசமிழந்து வாழ்பவர்க்குன்னருட்
- பிரபாவம் பிரவாகமாய்ப் பாயுமிடம் நல்பர்த்தியம்பதி
- ‘நான் இருக்கப் பயமேன்’ எனும் உன் மந்திரச்சொல்
- அணுவுக்குள் அணுவாய் ஊடுறுவி மாற்றத்தைச்
- செய்து மகிழ்வைத் தரும் தலம் பர்த்தித்தலம்
- மண் மரம் புல் பூண்டாயுன்னவதாரத் தலத்திற்
- பிறந்துனைத் தொழுதுன்னடி பற்றி வாழ்ந்து
- முக்திபெறவே உன் அருட்கருணை தரவேண்டும்
- ஸ்ரீ சத்திய சாயி தெய்வமே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்