சத்திய வாக்கு

 • செவ்விள நீரின் குளுமை போல் பேச்சில் இனிமை காணலாம்
 • செவ்வரளியின் நிறம் போல உருவில் அழகைக் காணலாம்
 • செவ்வந்தி மலர் அழகு போல் சிரிப்பில் காந்தம் காணலாம்
 • செவ்வங்கிதனில் நடந்துவருமழகில் நளினம் காணலாம்
 • தேன் சுவையாய் இனிக்கும் தெய்வத்தின் குரல் கேட்கலாம்
 • நான் நீ எனப் பக்தர்கள் மெய்மறந்துதான்
 • ரசித்துப் பஜன் பண்கேட்கலாம்
 • பஞ்சபூதங்கள்கூடப் பாந்தமாய்ப் பரவசித்துக் கேட்கலாம்
 • அப் பஞ்ச நதிகளும் பாய்ந்தோடி வந்தே சாயி
 • கருணாசாகரத்தில் சங்கமிக்கக் கேட்கலாம்
 • பர்த்தித்தலப் பரப்பிரமத்தை எங்கும் பார்க்கலாம்
 • சாயின் லீலாமகிமைகளைப் பார்முழுதும் பார்க்கலாம்
 • கருணை அன்பினை எண்திக்கும் பார்க்கலாம்
 • காருண்ய வடிவுதனைக் காலமெல்லாம் பார்க்கலாம்
 • விரும்பியே நாம் நமது சேவைகளைச் செய்யலாம்
 • கரும்பினில் சுவையாய் நமதுள மகிழ்வுடன் செய்யலாம்
 • காணுமிடமெல்லாம் சாயி உருவில்
 • நம் ‘சாய்ராம்களை’ யுணரலாம்
 • நம்மைப் பேணும் சாயினருட்கருணையினை
 • உணர்த்தி, உளம் மகிழலாம்
 • மாதா பிதா குரு தெய்வச் சகாவாயும் சாயிநாதன்தான்
 • மாதம் ஆண்டுயுகம் காலம் யாவும் சாயிரூபம்தான்
 • மலை கலை கடல் வான் இயற்கை அனைத்தும்
 • சாயி வடிவம்தான்
 • எல்லையில்லா அன்புக்கருணை தந்து வாழ்வியல்
 • வாழவைப்பதுவும் நம் ஸ்ரீ சத்ய சாயி
 • தெய்வம்தான் என்பதும் நம் தெய்வ வாக்கே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0