ஆயகலைகளிலும்

  • ஆயக்கலைகள் அறுபத்து நான்கையும் அறியச் செய்தாய்
  • அறுசுவை உணவுகளையும் சுவைத்து
  • உணர்ந்து, உண்ண வைத்தாய்
  • ஆலகால விஷம் உண்டு தேவர்களைக் காத்து நின்றாய்
  • ஆதி சிவனாக நின்று அடிமுடி தேட வைத்தாய்
  • அர்த்தநாரீஸ்வரக் கோலம் கொண்டு
  • உமைபாதி பங்கன் ஆனாய்
  • முப்புரம் எரித்து முனிவர்களுக்கு அபயம் தந்து காத்தாய்
  • அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு
  • வரலாறு படைத்துத் தந்தாய்
  • ஆறுமுகனிடம் பிரணவம் கேட்டு
  • அன்புத் தந்தையாய்க் காணச் செய்தாய்
  • சக்தியும் சிவனும் ஒன்று என்று அகிலத்திற்கழகா யறிவித்தாய்
  • ஆனைமுகன் தந்தையாக
  • திருக் கோகர் ணேஸ்வரராய்க் காட்சி தந்தாய்
  • சிவமே நீ தவமாய் சிவனாய் ஜீவனாய் செபமாய்
  • செயமாய் அகிலத்தை இரட்சித்து வருகிறாய்
  • ஸ்ரீ சத்திய சாயி தெய்வமாய் எங்கள் இதயத்தின்
  • சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்கிறாய்
  • பர்த்தியம்பதியிலே பன்முகப் பக்தருக்கும் அருட்காட்சி தந்து
  • அபயஹஸ்தம் அளிக்கிறாய்
  • குன்றில் ஆடிவரும் குகனின் தந்தையே
  • அரசமர நிழலில் அமர்ந்து இருக்கும் மூல முதல்வனே
  • மன்றில் நாடிவரும் அம்பல வாணனே
  • உமை பார்வதி பதியே, அனைத்தும் நீயே
  • ஸ்ரீ சத்யசாயி சாயீசா மலரடி சரணம் சரணம் போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0