உணர்வில் உயிர்ப்பித்து

 • எங்குமெதிலும் நீயே உடனிருந்து உள்ளொளி காட்டுகின்றாய்
 • குருதெய்வமாய் கற்பகத்தருவுமாய் அருவுருவாய்
 • வழி நடத்துகிறாய்
 • மலராயதன் மணமாய் இசையிலதன் நாதமாய்
 • கண்ணுக்குத் தெரியாமல்
 • அகத்துள் மறைந்திருக்கின்றாய்
 • சூசகமாயும் சுபிட்சமுமாய்க் கனவிலும் நனவிலும்
 • சுகந்தமாய்ப் பரிமளிக்கின்றாய்
 • ‘நான் இருக்கப் பயமேன்’ என்பாய் சுவாமி
 • உன் தாரக மந்திர வார்த்தையால்
 • நீ இருக்கப் பயமேனென்றெண்ண வைத்துன்னில்
 • ஐக்கியப்படுத்தி உன் அன்புக்கருணையிலே
 • ஆட்கொண்டுவிட்டாய் சுவாமி
 • என்றும் எங்குமெதிலும் உனது கருணையையே
 • எங்களின் கவசமாக்குகிறாய் சுவாமி
 • அனைத்துயிர்களிலும் சுவாசமாயிருந்து உய்விக்கிறாய்
 • மனதின் மும்மலங்களிலிருந்து அங்குசமாய்
 • அபயஹஸ்தத்தில் அபயமளிக்கிறாய்
 • ‘ஜோதி தியானத்தின்’ சோதியில் சுடராய் ஒளிர்விக்கிறாய்
 • உலகின் ஞானதீபமாய் அஞ்ஞானம் நீக்கி ஞானம்
 • நல்கி அருள் நயம் பயக்கிறாய்
 • உயிரில் கலந்து உணர்வில் உயிர்ப்பித்து
 • அணுவுக்குள் அங்கமாகிப் பங்கம் வராமல்
 • பாங்காய்க் கீதைப்பாதையில்
 • வாழ்வியல் வழி நடத்துகிறாய்
 • என்றென்றும் உன் பதமலரடி
 • சரணம் சரணம் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0