தூமணி மாடத்து

  • தூமணி மாடத்துத் தீபச்சுடரொளியாய் மாயப் பிறப்பறுக்கும்
  • மாயன் மாதவனுன் துணையில் நியாயத் தராசாய்ச் சீர்தூக்கி
  • நன்மை செய்திடல் வேண்டும்
  • மனித மாய், கயாவின் விஷ்ணு பாதப்பவித்திரமாயுன்
  • பதமலர் தொழுது புண்ணியப் பதிவேற்ற வேண்டும்
  • விருத்தமாயுன்பாக்களைத் திருத்தமாய்ப் பாடல் வேண்டும்
  • புவியினில்வாழும்வரை யுனைக்கவியில் புனைய வேண்டும்
  • நா மணக்க உன் பஜன் பாடல்கள் எண்திக்கெங்கும்
  • பாங்காய் ஒலிக்க வேண்டும்
  • மனம்முழுக்க வுன்நாமஸ்மரணகீதங்கள் நாவினில்
  • நடமிடல் வேண்டும்
  • பூ மணக்கத் தூவியுனது பொற்பதமலரடி
  • தொழுதல் வேண்டும்
  • உன் ஜப தபதியானங்களே தினம்தினம்
  • பிரவாகப் பிரசாதமா யமைந்திடவேண்டும்
  • பொற்றாமரைக் குளத்துப்புதுப் பங்கயமலர் சூடியுன் பதமலர்
  • வந்தனை செய்திடல் வேண்டும்
  • உன் நவரச லீலைகளையும் நங்கூரமாய் நர்த்தனமாயுயிர்
  • கலந்தேரசித்தல் வேண்டும்
  • நீ வகுத்த சனாதனச் சேவைகளாற்றியே உனதன்புக்
  • கருணையிலே இப்பிறவிவரை திளைத்திட வேண்டும்
  • ஸ்ரீ சத்ய தெய்வமே சரணம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0