தூமணி மாடத்து
- தூமணி மாடத்துத் தீபச்சுடரொளியாய் மாயப் பிறப்பறுக்கும்
- மாயன் மாதவனுன் துணையில் நியாயத் தராசாய்ச் சீர்தூக்கி
- நன்மை செய்திடல் வேண்டும்
- மனித மாய், கயாவின் விஷ்ணு பாதப்பவித்திரமாயுன்
- பதமலர் தொழுது புண்ணியப் பதிவேற்ற வேண்டும்
- விருத்தமாயுன்பாக்களைத் திருத்தமாய்ப் பாடல் வேண்டும்
- புவியினில்வாழும்வரை யுனைக்கவியில் புனைய வேண்டும்
- நா மணக்க உன் பஜன் பாடல்கள் எண்திக்கெங்கும்
- பாங்காய் ஒலிக்க வேண்டும்
- மனம்முழுக்க வுன்நாமஸ்மரணகீதங்கள் நாவினில்
- நடமிடல் வேண்டும்
- பூ மணக்கத் தூவியுனது பொற்பதமலரடி
- தொழுதல் வேண்டும்
- உன் ஜப தபதியானங்களே தினம்தினம்
- பிரவாகப் பிரசாதமா யமைந்திடவேண்டும்
- பொற்றாமரைக் குளத்துப்புதுப் பங்கயமலர் சூடியுன் பதமலர்
- வந்தனை செய்திடல் வேண்டும்
- உன் நவரச லீலைகளையும் நங்கூரமாய் நர்த்தனமாயுயிர்
- கலந்தேரசித்தல் வேண்டும்
- நீ வகுத்த சனாதனச் சேவைகளாற்றியே உனதன்புக்
- கருணையிலே இப்பிறவிவரை திளைத்திட வேண்டும்
- ஸ்ரீ சத்ய தெய்வமே சரணம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்