வெளி வளியில்
- வெள்ளிதனில் வேள்வியாய் வந்து அதனில்
- வெம்மையாய் யாய் வந்திடுவாய்
- கேள்வியிலே பதிலாகியுமதன் பொருளாயும்
- பொருட்சுவை தந்திடுவாய்
- மேன்மையிலே நீதிகொள் சைவமாகச் சிவமாகச்
- சிவசக்தி ஸ்வரூபிணி நீ மங்கள நாள் தன்னில்
- மஞ்சளொடு, குங்குமமும் தரமகிழ்வுடனே வந்திடுவாய்
- திங்கள் முடி சூடிய கங்கை அணிந்தவ முக்ண்ணனின்
- முதன்மையாய் ஆதி அந்தமாய் ஐங்கரனின் அழகு,
- வேலவனின் அன்னையாய், ஆதிசக்தி ஸ்வரூபமாய்
- அபயஹஸ்த அருள் தருவாய்
- ஓம் காரமும், ஒலிவடிவும், வெளி வளியும், நிறைந்தே
- ஆதிசக்தியுடன் திகழ்வாய்
- சாயி அன்னையா மெங்கள் ஸ்ரீ சத்யசாயி மாதா உனக்குச்
- சாஷ்டாங்க நமஸ்காரம்
- சகல அல்லவை களகற்றி நல்லவைகள் தந்து நலமுடன்
- வாழ அருள் செய்ய வரவேண்டும் பர்த்தீஸ்வரி
- பரமேஸ்வரி, சாயீஸ்வரி தாயே, உனக்குச் சுபமங்களம்
- நீக்கமற நிறைந்த நிறை மதியே நின்
- பதமலரடி சரணம் போற்றி போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்