பக்த லக்ஷணம்
- சொல்லச் சொல்லத் தித்திக்கும் சாயி நாமம் முக்திக்கும்
- அள்ள அள்ளக் குறையாதவன் அன்பு வெள்ளம் பக்திக்கும்
- மெல்ல மெல்ல நடந்து வரும் நடையின் நளினம் நர்த்தனம்
- எண்ண எண்ண நிரம்பிவிடும்
- இதயம் முழுதும் சாயி வந்தனம்
- செல்லச் செல்ல இனித்திடும் பர்த்திப் பயணம் பரவசம்
- மெல்ல மெல்ல மனம் கரைந்திடும்
- சாயினருள் வெள்ளப் பரிச்சயம்
- கேட்கக் கேட்க ரசித்திடும் சாயின் வினோத அற்புதம்
- பார்க்கப் பார்க்க சலிக்காது சாயின் பற்பல அதிசயம்
- பக்தனுக்கும் பரமனுக்கும் பரமானந்த யுக பந்தனம்
- சித்தமெல்லாம் பரவசிக்கும் பரப்பிரம்மம் அவன் தரிசனம்
- மொத்தமாய்ச் சந்ததியே சரணாகதி யிலவன் ஸ்பரிசனம்
- சத்தமின்றிச் சங்கல்பிக்கும் பக்தன் மீது அவன் கரிசனம்
- ஓம்கார மண்டபத்தில் அவன் சாக்ஷாத்காரம் மௌனிக்கும்
- ரீங்காரமாய்ப் பிரசாந்தி வலத்திலவன் அருள் சித்திக்கும்
- சிருங்காரமாய்ச் சிரிக்குமவன் அபயஹஸ்தம் மகத்துவம்
- அலங்காரமாய்த் தபோவனத்ததி லவன்அருளமுதம் கிட்டிடும்
- ‘பங்காரு’ என விளிக்கும், கனக அம்பரம் தரித்த
- சாயின் நயன தீட்சை நிச்சயம்
- சாயி இருக்கக் குறையில்லை இது சத்தியம்
- சுவாமி பணித்த சேவைகள் ஆற்றுவது நமது லட்சியம்
- சுவாமி பாதை நடப்பதுதான் பக்தர் நமது இலட்சணம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்