ஞானத்தில் சாயி நீ
- ஞாயிறாய் சாயி ஞாலத்தில் உதயம்
- ஞானத்தில் சாயிநீயே கலைவாணி வடிவம்
- உன் சங்கல்ப மகிமைகளில்தானே பக்தர்களின் படிவம்
- உன தபயக்கரங்களில் பெற்றிடுவாய்தான் கடிதம்
- உன் பங்கயப் பாதங்கள் தருமே பக்தர்களுக்கு அபயம்
- உனது தரிசனம், ஸ்பரிசனம், சம்பாஷனங்களுன்
- னருகாமையின் தருணம்
- சத்திய சாயிநாதனுன் நாமஸ்மரணைதானே
- எங்களின் ஸ்மரணம் பிரதமம்
- நீ பணித்திட்ட பற்பலசேவைப் பணிகளே எங்களின் பிரசாதம்
- நியாயமான கோரிக்கைகளை நீ நடத்தி வைப்பதுன் பிரகாசம்
- உன் கருணை அன்பு அருள் ஒன்றே எங்களின் பிரதாதம்
- உனதடி பணிகின்றோம் சரணம்
- ஸ்ரீ சத்திய சாயி நாதனே போற்றி
- போற்றியே உனக்கு ஆத்ம வந்தனம், ஆனந்த பக்திப் பிரபாவம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்