ஆறுபடை வீடுகளில்

  • பழனிமலையில் உன்னருள் வழங்குமழகில்
  • உன் அன்புக் கருணை தெரியும்
  • கழனிகள்தோறும் விளைந்திடும் நெற்கதிர்களிலுன்
  • அமுத வியாபகம் புரியும்
  • திருச்செந்தூரின் அலைகளில் உன் அன்பும்
  • கருணையும் ஆர்ப்பரிக்கும்
  • செவ்வானமும் செவ்விள நீருமுன்னருட்
  • னருட்சுவைதனைப் புரியவைக்கும்
  • சுவாமிமலையில் உன் பிரணவ மந்திரம்
  • விண்ணிலும் ஒலித்து நிற்கும்
  • திருத்தணியில் வள்ளி தெய்வ யானையுடனுன்
  • மணக்கோலம் சிறக்கும்
  • பழமுதிர்ச்சோலையி லுன் னருள்சுனை நீரிலும்
  • சுவைக்க இனிக்கும்
  • திருப்பரங்குன்றத்தில் உன் தீபம் மலை மீதிலும்
  • சுடராய் ஒளிரும்
  • வேலிருக்க வினையில்லை மயில் இருக்கப் பயம் இல்லை
  • சாயிகந்தன் நீ இருக்கக் கவலையேதுமில்லை
  • குமரன் எங்கள் அமரன் கந்தன் எங்கள் சொந்தன்
  • வடிவேலன் எங்கள் குலவேலன் என்றுன்
  • பக்தர்மனங்க ளுன்னைத்தான் வாழ்த்தும்
  • ஸ்ரீ சத்திய சாயி சுப்பிரமணிய தெய்வமே சுபிட்சம்
  • அளித்திட வருவாய் அருள் தருவாயே சாயி முருகா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0