புது விடியல்

  • சேவல் கூவிப் புது விடியலைப் புதுப்பிக்கச் செய்தது
  • காகம் கரைந்து பொழுது புலர்தலைப் புரிய வைத்தது
  • குயில் கூடித் துயிலெழுப்பி ஓம்காரம் ஒலிக்கச் செய்தது
  • பற்பல பறவை இனமும் (பன்மத பக்தர்களும்)
  • கூடித் துயிலெழுப்பி சுப்ரபாதம் ஒலிக்கச் செய்தது
  • சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகள் கீச்சுக்குரலில்
  • அஷ்டோத்திர நாமாவளி இசைத்தது
  • எண்ணமெல்லாம் குல்வந்த் அரங்கில்
  • பஜனை கேட்க பாட வைத்தது
  • வண்ணமய நம் சுவாமியைக் கண்டு மனம்
  • ஆனந்தம் கொண்டது, அதிசயம் கண்டது
  • மனமும், வயிறும், நிறைந்து கொண்டு
  • உணவகச் சேவையில் நிறைந்தது
  • நம் சுவாமி பிறந்த இடம் முதல், ஈஸ்வரம்மா நினைவிடம்,
  • கோகுலம், சைதன்ய ஜோதி, கல்வித்தலங்கள்,
  • மருத்துவமனை என ஓடி நாடித் தேடிப்பாடிப் பார்த்து,
  • மகிழ்ந்தது மனது நன்றிகள் கூறி நவில்ந்தது
  • சுவாமி படங்கள், புத்தகங்கள் பல்பொருட்கள் வாங்கி
  • அளவிலா ஆனந்தமடைந்தது
  • மாலை நேர பஜனை பாட, கேட்க, மனதும்
  • பறந்து வந்தது, விரிந்து மலர்ந்தது
  • தபோவனத் தருவின் தியானத்தில்
  • மனம் அமைதி அடைந்தது
  • சுவாமியின் கண்காட்சி அரங்கில் பரவசமடைந்தது
  • சித்திராவதி நதி தீரம் கண்டு மனம் சித்திரத்தைத்
  • தூரிகையில் வரைந்தது, கற்பகவிருட்சம்
  • கண்டு மனம் சுவாமியின் பொற்பதம்
  • நினைத்து மன மது நெகிழ்ந்தது
  • மிட்டாய்கள், பலகாரங்கள், கனிகள், சுவாமி சிறார்களுக்குக்
  • கொடுத்து மகிழ்ந்தது நினைவிலசை போட்டது
  • கோகுலத்தில் பசுக்கள் பார்த்து மனம் சாயி கோபாலனிடம்
  • மதுரா பிருந்தாவனம் யமுனை சென்றடைந்தது
  • ஸ்ரீராமர் சீதா லட்சுமணன் காட்சி பார்த்து
  • அயோத்தி மிதிலை நோக்கி வணங்கியது
  • குடை கணேசனைப் பார்த்து சுவாமியின்
  • கொடைக் கருணையை எண்ணி,
  • மனம் நன்றி சொல்லி நிறைந்தது
  • சாயி சுப்ரம்ணியனைக் கண்டு சுப்ரமணியம்
  • சுப்ரமணியம் பாடல் தானாகச் செவியில் ரீங்காரமிட்டது
  • சாயி காயத்திரிதேவியின் ஆலயத்தில் சாயி காயத்திரி
  • 1008, 108 நாமம் கூறி ஒலித்தது
  • சாயி மகாலட்சுமி ஓங்காரேஸ்வரரை மனமுருகித் தொழுதது
  • பற்பல சேவைகளில் கண்டு மனம் ஆனந்தித்துச் சிலிர்த்தது
  • பர்த்தியாத்திரையில் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து, நெகிழ்ந்தது.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0