அட்சராப்யாசம்
Sairam! This is available only in Tamil*
- அம்மா ஸத்ய ஸாயி
- என் கவிதைகளில்
- பொட்டு வைத்த
- எழுத்துக்கள் எல்லாமே
- உன்னைச் சுமக்கும் கர்ப்பப் பைகள்!
- அண்டத்தைச் சுறுக்கி
- எழுத்தில் இடம்பெறச் செய்யும்
- அணுக்கள்..!
- உயிர்மெய் காட்டும் கண்கள்
- வைரங்களைப் பிரகாசிக்கும்
- முத்துக்கள்
- ஒற்றெழுத்தாய் உருவம் தாங்கும்
- வசந்த கால மொட்டுக்கள்
- அம்மாவே சத்தியம்
- எனக்கோ நீ
- சத்தியமே அம்மா
- என் அன்னையைக்
- காற்றாக்கி
- நீ எனக்கு சுவாசமானவன்
- அண்டத்தை
- அடைகாக்கும் அன்னப்பறவை நீ
- ஸத்ய ஸாயி அம்மா
- கிரகங்களின் அசைவுகள்
- உனது கோலி விளையாடல்கள்
- தெய்வங்களே தொழுகின்ற
- தெய்வம் நீ
- உன் பார்வையிலேயே
- நீ எனக்குப் பாலூட்டுவதால் தான்
- எனக்கு மட்டும் நீ
- அமானுஷ்ய அம்மா
- பக்தர்களே
- இரு துவாரம் கொண்ட
- நாசிகள்
- எப்படி ஒரு புயலை
- உள் இழுக்கும்?
- ஈரம் தோய்ந்த நாக்குகள்
- எப்படி ஒரு எரிமலையை விழுங்கும்?
- சாத்தியம் -;
- சகலமும் சாத்தியமும்
- சரணாகதியில்…
- உன் ஆயுள் ரேகையே
- இந்த பூமியின் வேர்கள்!
- நிலவை வரைவதற்கு
- நிலவின் ஒளியையே
- வர்ணம் தொட்டுக் கொள்கின்றன
- என் தூரிகைகள்
- சமுத்திரப் பிரவாகத்தை
- ஸ்பூனில் தருகிறபோதும் கூட
- அதில் எட்டிப் பார்க்கிறது
- உன் கருணை ஆகாயம்
- உன் காவி உடை என்பது
- நெருப்பு
- உன் கருணை முகம் என்பது
- கங்கை
- ஆக.. குளிரும் வெப்பமும்
- கலந்தது தான் வாழ்க்கை என்பதை
- உன் கால ரூபமே
- கற்றுக் கொடுக்கிறது!
- சுவாமி நீ
- புன்னகைக்கின்ற போதெல்லாம்
- உருவம் இல்லாத மலர்கள்
- மலர்ந்து விட்டு
- மனதில் மணக்கின்றன…
- நீ
- பார்க்கின்ற போதெல்லாம்
- நம் இடைவெளியைக் கரைத்துவிடுகின்றன
- உன் ஆழ்கடல் விழிகள்
- மனித அறிவு ஒரு
- உப்பு பொம்மை
- ஸாயி இறைவன் நீயோ சமுத்திரம் !
- மனித உயிர் ஒரு மத்தாப்பு
- சாயி இறைவன் நீயோ நட்சத்திரம் !
- வான வேடிக்கையும்
- வாண வேடிக்கையும்
- உனக்கான வழிபாடுகள்
- சிறு புகைப்படத்தில் கூட
- சாந்நித்யம் காட்டும்
- அதிஅற்புத இறைவன் நீ
- பஜனை ஒரு தாலாட்டு
- ஆனால் அதைப்
- பாடுபவனே தாலாட்டப்படுகிறான்.
- அந்தத் தாலாட்டில்
- மாயை தூங்கி வழிகிறது
- மனித ஆன்மா
- தட்டி எழுப்பப்படுகிறது !
- கவிஞர் வைரபாரதி
- (இறைவன் ஒரு கவிதை நூலிலிருந்து)