அந்தநாள் மீண்டும் வருமா சாயீ!?
Sairam! This is available only in Tamil*

- பாரினைக் காக்கும்
 - பர்த்தீஸ் வரனே!
 - தாரணி காக்கும்
 - தாமோ தரனே!
 
- பக்தி செய்வோர்க்குப்
 - பதமலர் அருளும்
 - பகவான் உனக்கிது
 - பக்தையின் கடிதம்.
 
- பண்டும் பண்டும்
 - பக்தர் பலரும்
 - கண்டும் கேட்டும்
 - காலங்காலமாய்ச்
 - சொல்லி மகிழும் உன்
 - சுந்தர லீலையை
 - அல்லும் பகலும்
 - அகமே நெகிழ
 - நினைந்து நினைந்தென்
 - நெஞ்சம் ஏங்கும்.
 - அனைத்தும் மீண்டும்
 - நடக்கா தாஎன
 - ஆதங்கப் புயல்
 - அகத்தில் வீங்கும்.
 
- கஸ்தூரி கையில்
 - குடம்பிடித் திருக்க
 - ஹஸ்தம் சுழற்றிநீ
 - விபூதி பொழிய
 - ஷீரடி பாபா
 - அபிஷேகத்தை
 - நேரடி யாய் நீ
 - நிகழ்த்திய காட்சி
 - விந்தையில் விந்தை!
 - விசித்திர லீலை!
 - அந்த நாள் மீண்டும்
 - வருமா சாயீ?!
 
- ஈசுவரன் உன்றன்
 - பிறந்த நாளிலே
 - ஈசுவரம் மாவந்து
 - தைலம் பூசநீ
 - குனிந்து கொடுத்துக்
 - குறும்புச் சிரிப்பில்
 - அமர்ந்து பொலிந்த
 - அந்நாள் வருமா?
 
- பர்த்தியி லிருந்த
 - பக்தர் மனைகளில்
 - திடும்திடு மென்று நீ
 - சென்றதும் நின்றதும்
 - வாசலில் உனக்காய்
 - தவம் அவர் கிடக்க
 - பின்வழி வந்துநீ
 - கண்பொத் தியதும்
 - கன்னல் பேச்சும்
 - கனிமொழிக் குறும்பும்
 - இன்னல் தீர்க்கும்
 - இன்ப கீதமும்
 - பார்த்துக் கிடந்தவர்
 - பாக்கியம் செய்தவர்!
 - கேட்டுக் கிடந்தவர்
 - புண்ணியம் செய்தவர்!
 
- அனந்தன் உந்தன்
 - அன்பை அன்றவர்
 - தினம்தினம் நுகர்ந்து
 - தித்தித் தனரே
 - அடடா அதையெலாம்
 - நினைத்தால் ஸ்வாமி
 - எதையெலாம் நாங்கள்
 - இழந்தோம் என்று
 - படபடத் தெங்கள்
 - மனந்துடிக் கின்றோம்
 - படங்களில் பார்த்தே
 - பசியாறு கின்றோம்.
 
- சித்ரா வதிக்கரை
 - தீரத்தி லிருந்து
 - சித்ரான்னங்களும்
 - திருவிளை யாடலும்
 - கண்டு கண்டங்கு
 - களித்து வாழ்ந்த
 - குமாரம் மாவும்
 - குடும்பத் தினரும்
 - சொன்னது கேட்டால்
 - சுழலும் மனமே
 - எழுதியது படித்தால்
 - ஏங்கும் உளமே
 - வேர்முத லாக
 - விழுது வரைக்கும்
 - வேர்ப்பலா தானே
 - சாயி உன் சரிதம்!
 
- குதிரைச் சவாரி
 - குளுகுளு கண்ணாடி
 - அதிரசப் பேச்சில்
 - பக்தரை மயக்கி
 - சிரித்துச் சிரித்து நீ
 - பயணம் செய்த
 - சரித்திரம் சம்பவம்
 - வருமா மீண்டும்?!
 
- பனிமலையேற்றம்
 - பக்தர் தம்முடன்
 - பழங்கோ யில்களின்
 - கருவறை புகுந்து
 - லிங்கம் வில்வம்
 - தும்பை புதுநகை
 - தங்கம் படைத்துன்
 - விபூதி பொழிந்து
 - தெய்விகம் புதுக்கிய
 - தேவசம் பவம்
 - திரும்பவும் காணும்
 - திருநாள் வருமா?
 
- மக்கள் வெள்ளத்தின்
 - இடையிடை யேநீ
 - மானாய் மயிலாய்த்
 - துள்ளி நடந்து
 - கானாம் ருதமே
 - கைதட்டிப் பாடி
 - தேனார் பேச்சில்
 - திசைகளை மயக்கி
 - ஆனாத மகிழ்வை
 - அளித்ததை யெல்லாம்
 - கண்டு களித்தவர்
 - கைலாச வாசிகள்!
 - வந்து சுவைத்தவர்
 - வைகுண்ட வாசிகள்!
 
- ஒப்பிலாமணி உனை
 - பாலபரு வத்தில்
 - முப்போதும் வந்து
 - பராமரித் திருந்த
 - சுப்பம்மா விற்கு
 - கங்கைநீர் புகட்டி
 - சொர்க்கம் அனுப்பிய
 - சத்ய தெய்விகம்
 - நினைக்க நினைக்கஎன்
 - நெஞ்சம் உருகும்.
 
- நீதுயில் வதுபோல்
 - சயனித் திருக்க
 - நீலாம் பரியில்
 - எம்.எஸ். இசைக்க
 - கேட்கும் போதே
 - மனம்இனிக் கிறதே
 - பார்க்கும் பாக்கியம்
 - வருமா மீண்டும்?!
 
- காலையும் மாலையும்
 - தரிசனம் கிடைக்கலாம்
 - லீலைகள் காணும்
 - வாய்ப்பும் கிடைக்கலாம்
 - உன்னுடன் உன்னுடன்
 - வாழ்ந்து களித்த
 - அன்னவர் பெற்றது
 - யார்க்கினி கிடைக்கும்?
 - அந்தநாள் மீண்டும்
 - வருமா சாயீ?
 - அந்தநாள் அந்தநாள்
 - வருமா மீண்டும்?!
 
- -ஶ்ரீ சத்யசாயி கவிதைகள்
 - என்றும் சாயிசேவையில்
 - கவிஞர். பொன்மணி
 
  
  Help Desk Number: