இகபர சுகம்

  • செகம் புகழும் புண்ணியத்தலம் சாயிராமனின் பர்த்தியே
  • அங்கு அகிலமெல்லாம் அகம் மகிழும்
  • சாயிநாதனின் அன்பின் ஆட்சியே
  • யுகந்தோறும் தொடர், தொடர்ந்திடும், பந்தம் பாந்தமே
  • என்றும் இகபரசுகம் தந்தெமையது வாழ வைக்குமே
  • பரப்பிரும்மம் பார்த்தசாரதி பஞ்சாட்சரசிவசக்தி யாயும்
  • காணும் காட்சியே
  • அரியும் அரனுமொன்றென்றே தோன்றும் ரூபமே
  • பல பெயர்களில் பல வடிவில் பன்மதப் பக்தர்களும் பார்க்கும்
  • தோற்றமே அதிலேதென்றுமில்லைதான் மாற்றமே
  • பக்தர்களுக்கில்லை எதிலும் ஏமாற்றமே
  • அதுசத்யசாயின் மாட்சியே, சங்கல்ப சாட்சியே
  • எங்குமெதிலும் சாயிநாதனின் கீர்த்தியே
  • செவ்வங்கியில் உயிர்களின் மனமந்திரத்தில் உலா வந்து
  • நிலாவாய்க் குளுமை தரவேண்டும்
  • அருள்தர வேண்டும், அன்பும் கருணையுடனே
  • அபயஹஸ்த ஆசியிலுன் கருணையில் வரம் தரவேண்டும்
  • ஸ்ரீ சத்திய சாயி நாத தெய்வமே போற்றி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0