உதிக்கின்ற செங்கதிரும்

  • உதிக்கின்ற செங்கதிருமுன்னரு ளாலுருவாகும்
  • துதிக்கின்ற உள்ளமதில் உன் உருவம் மட்டுமே நினைவாகும்
  • மதிக்கின்ற மக்களெல்லாமுன் னுருவில்
  • அன்பில் நடமாடும் – சாயி
  • தகிக்கின்ற தணலதுவு முன்னடிதனில் வந்து தஞ்சம் புகும்
  • செவிக்குணவு உன்திருநாமம் கேட்டலே
  • இப்புவிக்குணவு நின்திருமேனி வாசம் செய்த
  • தரிசனம் சேவித்தலே
  • கவிக்கழகுன் துதிப்பாடல்கள் புனைதல் பாடல் கேட்டல்தான்
  • சாயி உன் காவி அங்கிக்கு அழகு உன் திருமேனியில்
  • அணிவித்தல்தான்
  • அடிக்கரும்பின் ருசியாமுன் ‘பங்காரு’ விளித்தலினிமையே
  • மாதா பிதாகுரு தெய்வச் சகாவுமாய் அருவுருவாய்
  • அருள்பாலிக்கும் ஸ்ரீ சத்திய சாயிநாத
  • குருதெய்வமே
  • ஸ்ரீ சத்யசாயி சிவராமகிருஷ்ணனே உன் மலரடி போற்றியே
  • பணிகிறோம் சரணம் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0