கற்பகமே

  • கற்பகமே உன் பொற்பதம் தன்னில் பணிந்திட
  • இப்பிறவிப் பயனெய்தட்டும்
  • அற்புதமே உன் ஆச்சரிய அதிசய மகிமைகளில்
  • அழகாய்ப் படரட்டும்
  • சொற்பதங்களுன் அருளுரை பொருளுரையிலே
  • வாழ்வியல் வளம் நலமே சேரட்டும்
  • சிற்சபேசனுன் சீர்மிகு சித்திகளில் மனம்
  • சிருங்காரமாய்ச் சிறக்கட்டும்
  • நற்பவியாய் நானிலமும் எண்திக்கும் துலங்கட்டும்
  • ஸ்ரீ சிவசக்தி ஸ்வரூபனே பர்த்தீஸ்வர சாயீசா, சர்வேசா
  • சகலருக்கும் சாமானியருக்கும் உன் அருள்தான்
  • கிட்டுமே அதிசயமாய் சாஸ்வதமாய்
  • உன் பக்த நதிகள் உனது சங்கமக் கருணாகரக் கடல்
  • தேடி ஓடி நாடி வந்து பாடிக் கலக்கும்தான் ஆனந்தமாய்
  • பற்பல துன்ப துயரங்களை நீக்க, ஏன் இந்த வாழ்வென்று
  • ஏங்கி உனை வேண்டித் துதிப்போர்க்கு நீ இரங்கி,
  • இறங்கியே, வந்து ஆட்கொள்ளும்
  • அருட்கொடைக்கு அளவுகோலேது சுவாமி
  • நீ இருக்க உன் துணையிருக்கக் குறையேதும் இல்லை
  • ஸ்ரீ சத்யசாயி மகேசா சர்வேசா
  • உனக்கு அலங்கார ஆத்மப் புனித வந்தனம் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0