புகலிடம்
- சாயி ராம நாமம் தன்னை நாள் முழுக்கப் பாடுவோம்
- தாயுமாகி வந்து தந்த கருணை தன்னை
- எண்ணி மகிழுவோம்
- தாயுமான சிவமாயுன்தாள் பணிந்துதான் வணங்குவோம்
- தந்தையும்தான் நீயென்றே எங்கள் சிரம்
- தாழ்த்தியுனைத் தொழுதிடுவோம்
- உன் சரணம் அஷ்டசக்திகளின் புகலிடம்
- உன்னவதாரப் பர்த்தியே மொத்த உலகின் புகழிடம்
- உன் அன்பின் மொழியே சனாதனக் கலைநயமுன் மயம்
- அனைத்து உலகிலும் இஷ்டமாயுனைத் துதிப்போர்தம்
- கஷ்டமே நடந்தும், கடந்தும், போகுமே
- இகபரசுகமதில்தான் இன்பம் வந்து சூழுமே
- ஆகமங்களின் வேள்வியாய் ஆயகலைகளின் ஆட்சியாய்
- உனது சிருஷ்டியா யருந்தமிழின் இனிய நல்மொழி
- யாமழகாய் இவ்வுலகை ஆட்டுவிக்கும்
- நாயகனே பரப்பிரும்மமே பஞ்சாட்சரமே உன் பங்கய
- மலரடி பணிந்திடவே வணங்கிடத்தான் வருகவே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்