மிதிலையின் நாயகனே

  • மிதிலையின் நாயகனே ஸ்ரீ சத்திய சாயிராமா
  • ராமாகதி நீயே கருணை செய்திட வரவேண்டும்
  • விதி தானே என மனம்நொந்து துயர்பட்டால் – நிதி
  • நிதி நீயேதானாய்த் தானாய் வந்தும்
  • கருணையே செய்வாய்
  • சீதைப்பதி சீர்மிகு அயோத்தி அரசே உன்
  • கீதைப் பாதை தந்திடுமே உனதன்புப்
  • பரிசை பர்த்திப் பரிசாய்
  • கோதை நாயகன் கோபாலன் உன் கோலோச்சும்
  • யமுனைத் தீரம்
  • ராதை சமமேதனுன் கருணைக் கொடையாகுமே
  • சித்திராவதிச் சாரம்
  • கோமதியும் சரயுவும் சங்கமிக்கும் அயோத்தியிலுன்
  • பக்தர் கூட்டம் அங்கம் வகிக்குமுன் பிரசாந்தியில்
  • சாயி சகாக் கூட்டம் பெருகுமே
  • உன் சங்கல்ப சாந்நித்தியத்தால்
  • அன்னை தந்தை சுற்றம் நட்பு உற்றார் உறவினர்
  • குருதெய்வமனைத்தும் நீயானாய்
  • முன்னையும் ஆதி அந்தமுமனைத்துமுன்
  • வியாபகமானாய்
  • மாசியில் மகாமகமாய் எங்களகமாய்த் தவமாய்ச்
  • செக மாய்ச் செபமாய் நலம் நல்கிட
  • நீ நாடி வரவேண்டும்
  • ஸ்ரீ சத்யசாயி ராமா உனக்கு ஆத்ம அனந்த வந்தனம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0