நீயில்லாத இடமில்லை
- பரப்பிரம்மம் இறங்கி வந்து இப்பாரினில் அவதரித்த நாள்
- பரமே சிவமா யிவ்வகிலத்தில் வந்துதித்தநாள்
- பரம்பொருளே சாயிராமனாக அருள் தர வந்த நாள்
- பரஞ்சோதியாய் சிவசக்தி சொரூபனாய்க்
- கருணை மழை பொழிந்திட வந்த
- திருவாதிரைத்திரு அவதாரத்திரு வருள் நாள்
- அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காத்திட வந்தாயே
- நல்லா கமங்களை அகத்தினில் பதிந்திடத் தந்தாயே
- சத்தியம் தர்மம் சாந்தி பிரேமை அகிம்சையை
- வழிநடத்தித் தந்தாயே
- மாதா பிதா குரு தெய்வம் சகாவாய்
- வாழ்ந்து வணங்கிடச் செய்தாயே
- இசை இன்பம் இயற்கையாவும்
- பஞ்ச பூதங்க ளனைத்துமுன் வியாபகமே
- ஆதியந்தமும் ஆண்டவனும் நீயே, ஆயகலைகளும் நீயே
- நான் இருக்கப் பயமேன்எனும் உன் மந்திரச்சொல்லே
- நீயிருக்க ஏதுகுறையென்றெண்ணியே
- மனம் மகிழ்வு கொள்ளுமே
- நீயில்லாத இடமில்லை நீ செய்வித்த
- புனிதச் சேவைகளுக்கும் எல்லையே இல்லை
- ஆன்மீகம் கல்வி மருத்துவம் இசை குடிநீர் சனாதனம்
- என அனைத்திலும் ஆக்கம் ஊக்கம் தந்திட்டாய்
- தார்மீகம் தயை தர்மம் பிரேமை அன்பு
- கருணை சேவைகளில் வடிவமைத்தாய்
- புது விடியலில் இருந்து துயிலும் வரை எதிலும்
- எப்போதும் உன் தாக்கமன்றி
- எங்கள் வாழ்வியலேது சுவாமி ?
- உன் அவதார காலத்தில் நாங்கள்
- வாழ்வது முந்தன் சங்கல்பமே
- மதுரா பிருந்தாவனக் கோப கோபியராய் அயோத்யா
- வாசிகளாய் யுகமாய்த் தொடர்ந்துன்னருட்
- கருணை மழையில் நனைகின்றோம்
- உன் மலரடி தொழுதிப் பிறவிப் பயனடைகிறோம்
- ஆயிரமாயிரம் அன்னையர் அன்பா
- முனதன்பில் திளைக்கிறோம்
- சனாதன சாரதி ஸ்ரீ சத்யசாயி தெய்வமே
- உன்பங்கய மலர்த்திருவடிகளுக்குச் சரணாகதியாய்
- எங்களின் அத்தியந்த ஆத்மார்த்த வந்தனங்களை
- ஏற்றுக் கொள்வாய் சுவாமி சரணம் போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்