நவ நிதிகளின்
- நவ நிதிகளின் அதிசயஅற்புதக் களஞ்சியம் உன் அன்பு
- அருள் அமுத உரைகள் சுவாமி
- நவ நதிகளின் புனிதச் சங்கமம்தானுன் னருளாசியும்
- அபயஹஸ்தமும் திருவடிகளும் சுவாமி
- நற்கதியளித்து நல்லாசி தந்து நற்பவி
- நல்குவதுன் கருணையே
- நற்றமிழாலுனைக் கவிபுனைதல்
- பண்பாடுதலுன் னன்புக்கொடைதான்
- பொற்குவியல்களே உன் அமுதமொழிகள்
- கற்பகத்தருவாயு யிர்ப்பித்து உயர்வித் துய்விக்கின்றாய்
- அற்புத லீலைகள் பல புரிந்தறிவிலடங்கா
- அதிசய ஆச்சரியமூட்டுகிறாய்
- சிற்சபேசன் உன் நவ பக்திகளில் அங்கம் வகித்துச்
- சங்கமித்திடும்தான் இம்மேதினியிலனைத் துயிர்களுமே
- பர்த்திப் பிரசாந்திச் சாயி சிவமே என்றும்
- உன் பதமே அனுதினமே பணிந்திருக்க
- வரமருள்வாயே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: