நீதானெங்களின் தில்லை
- உந்தன் பதமலரே எந்தன் துணை
- அப் பாதாரவிந்தமே என் உயிரில் இணை
- அதைத் துதித்திட்டால்தான் போகுமே முன்னை வினை
- சாயி உன் அன்பு அருட் கருணையே உயரத்தில் பனை
- நீ கொலுவீற்றிருக்கும் உன் பக்தர்களின் அகமே உன் மனை
- வருவினை போக்கியுன் னருட்கருணைப்
- பார்வையில்தானெங்களை வைத்திடுவாய்
- நீ தரும் உன் கருணைக்கு ஏது எல்லை ?
- அது கலை நயமாகும் மாமல்லை, இமயமலை
- உன் பிரசாந்திதானே சாயீசா எங்களின் தில்லை
- நீ இருக்க உன் துணையிருக்க வருமோ ஏதும் தொல்லை ?
- உன் அபயஹஸ்தமே வாழ்வியலில் மணம் வீசும் முல்லை
- உன் வடிவம்தனை யெங்களின் நெஞ்சத்திலே பதித்து
- உன் அன்பு அருளுறை, அறி, அறவுரைகளை
- அகத்தினில் நினைத்துன் அற்புத லீலைகளை
- அழகழகாய் ரசித்துன் அன்பு மதம் இன மொழிதனில்
- அடைக் கலம் புகுந்துன் பன்மதப்பக்தர் களின்
- அணிவகுப்பு அடுக்கடுக்காய்த் தொடர்ந்துன்
- சரணாகதிக்கு வருமழகை அணுஅணுவாய்
- ரசித்து மகிழ்ந்து தொழுகிறேன்
- ‘அன்பிலே நாளைத் துவக்கு’
- ‘அன்பே கடவுளென்று’ரைக்கும் அகிலமனைத்திலும்
- அனைத்துயிரிலும் சத்தியம் தர்மம் சாந்தி
- பிரேமை அகிம்சையை வழிப்படுத்திய
- அன்புத்தெய்வமே
- ஸ்ரீ சத்யசாயி தெய்வமுனக்கு ஆனந்த
- ஆத்ம வந்தனம் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்