நீதானெங்களின் தில்லை

  • உந்தன் பதமலரே எந்தன் துணை
  • அப் பாதாரவிந்தமே என் உயிரில் இணை
  • அதைத் துதித்திட்டால்தான் போகுமே முன்னை வினை
  • சாயி உன் அன்பு அருட் கருணையே உயரத்தில் பனை
  • நீ கொலுவீற்றிருக்கும் உன் பக்தர்களின் அகமே உன் மனை
  • வருவினை போக்கியுன் னருட்கருணைப்
  • பார்வையில்தானெங்களை வைத்திடுவாய்
  • நீ தரும் உன் கருணைக்கு ஏது எல்லை ?
  • அது கலை நயமாகும் மாமல்லை, இமயமலை
  • உன் பிரசாந்திதானே சாயீசா எங்களின் தில்லை
  • நீ இருக்க உன் துணையிருக்க வருமோ ஏதும் தொல்லை ?
  • உன் அபயஹஸ்தமே வாழ்வியலில் மணம் வீசும் முல்லை
  • உன் வடிவம்தனை யெங்களின் நெஞ்சத்திலே பதித்து
  • உன் அன்பு அருளுறை, அறி, அறவுரைகளை
  • அகத்தினில் நினைத்துன் அற்புத லீலைகளை
  • அழகழகாய் ரசித்துன் அன்பு மதம் இன மொழிதனில்
  • அடைக் கலம் புகுந்துன் பன்மதப்பக்தர் களின்
  • அணிவகுப்பு அடுக்கடுக்காய்த் தொடர்ந்துன்
  • சரணாகதிக்கு வருமழகை அணுஅணுவாய்
  • ரசித்து மகிழ்ந்து தொழுகிறேன்
  • ‘அன்பிலே நாளைத் துவக்கு’
  • ‘அன்பே கடவுளென்று’ரைக்கும் அகிலமனைத்திலும்
  • அனைத்துயிரிலும் சத்தியம் தர்மம் சாந்தி
  • பிரேமை அகிம்சையை வழிப்படுத்திய
  • அன்புத்தெய்வமே
  • ஸ்ரீ சத்யசாயி தெய்வமுனக்கு ஆனந்த
  • ஆத்ம வந்தனம் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0