அவதாரங்கள் பல

  • ராமாவதாரத்தில் ஸ்ரீராமனாய் வாழ்ந்து கட்டினாய்
  • ராவணவதமும் செய்து காட்டினாய்
  • கிருஷ்ணாவதாரத்தில் கீதைப் பாதை வகுத்துத் தந்தாய்
  • பற்பல வதங்களும் புரிந்திட்டாய்
  • சிவனாய் சீரடியிலும் சிவசக்தியாய்ப் பர்த்தித்தலத்திலு
  • மவத ரித்தாய், முப்புரமும் எரித்தாய்
  • முக்காலமதிலும் லீலைகள் புரிந்து மகிழ வைத்தாய்
  • முருகனாய்ப் பிரணவம் சொல்லி சூரனை வதம்
  • செய்து சூரசம்ஹாரனாகினாய்
  • ஆதி சக்தியாய்ச் சண்ட முண்ட வதம் செய்து
  • நவசக்திகளாய் நற்பவியு மளித்தாய்
  • விஷ்ணுவாய் தசாவதாரங்கள் தந்தும்
  • குருவாயூரப்பனாய்க் குவலயமும் வந்துவிட்டாய்
  • எத்தனை அவதாரங்களாயினும் பரப்பிரம்மம்
  • உன்னையன்றி வேறேது ?
  • அத்தனையிலும் உன்னருளன்றி நற்கதியாது ?
  • எப்பெயரிலழைத்திட்டாலும் முப்போதும் எப்போதும் தப்பாது
  • வந்து காத்தருள நீ இருக்கக் குறைஏதும் உண்டோ
  • ஸ்ரீ சத்திய சாயி நாத தெய்வமே உன் கருணை
  • இருக்க கறை வருமோ வாழ்வியலில் ?
  • சம்சார சாகரக் கடலின் கரைசேர நீ இருக்கையில்
  • மறை போற்றும் தெய்வமுன்னன்புக்
  • கருணையிருக்கக் குறையாது மறைமூர்த்தி பாபா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0