தூரிகையாய்
- தூரிகையாய் இதயத்தில் வரைந்து
- உயிரில் பதித்திட்டாயுனையே
- தாரகையயாய்ச் சத்ய தர்ம சாந்தி பிரேமை அகிம்சைப்
- பெயர்களிலதனை வளர்த்திட்டாய் கற்பகத்தருவாய்
- பேரிகையாய்ச் சனாதன தர்மமதைக் காத்தருளினாய்
- மும்மலங்கள் நீக்கிப் பேரிடர்களைந்து பேரின்பம்
- நிலைக்கச் செய்தருள்வித்தாய்
- பேரானந்தமளித்துப் பேதையர் மனம் மகிழச்செய்தாய்
- யார், எது நிறை ஸ்வாமி உன் அன்பான கருணைக்கும்
- தயை பிரேமைக்கும் ?
- யாது குறையும் வருமோ நீயிருக்கத் துன்பமாம் துயருமே !
- ஏது குறைகளுன் பக்தர்க்கு எண்ணிக்கையாய்ச் சொல்ல ?
- நானிருக்கப்பயமேனென்று நீ கூறும் உன் சத்தியவாக்கைத்
- தானென் சொல்ல ?
- அம்மந்திரச்சொல் மாமருந்தாம் உயிர்களுக்கு உய்வதற்கே
- பர்த்திப் பரப்பிரும்மமே ஸ்ரீ சத்திய சாயி நாராயணா
- உன் மலரடி சரணம் போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்